Monday, July 18, 2011

அழுவதா? சிரிப்பதா?

http://thatstamil.oneindia.in/movies/specials/2011/07/kollywood-damages-madurai-s-image-aid0128.html

இச்சுட்டி தரும் செய்தி....இது....


மதுரை: மதுரை என்றாலே வன்முறை நிறைந்த நகரம் என்று நினைக்கும் அளவிற்கு தமிழ் திரைப்படங்களில் கோவில் நகரம் கொலை நகரமாகக் காட்டப்படுகிறது. இதனால் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மதுரைக்கு வர அஞ்சுவதாக தெரிய வந்துள்ளது.

மதுரை என்றாலே மல்லிகைப்பூவும், மீனாட்சி அம்மனும் தான் நினைவுக்கு வரும். விருந்தோம்பலில் மிரள வைப்பவர்கள் மதுரைக்காரர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே. அறிமுகம் இல்லாதவர்களாக இருந்தாலும் கேட்காமலேயே உதவிக்கு வருபவர்கள் மதுரையைச் சேர்ந்தவர்கள். பாசத்துக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று மதுரையைப் பற்றி நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் தமிழ் சினிமாக்காரர்களுக்கு மட்டும் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது.

நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்களை வைத்துப் படம் எடுத்து கல்லாக் கட்டி பிழைத்து வரும் தமிழ் சினிமாக்கார்களின் செயலால் இன்று மதுரை நகரம் மிகப் பெரிய அவலத்தையும், பொருளாதார பின்னடவையும் சந்திக்க நேர்ந்துள்ளது என்றால் நம்ப முடியவில்லை இல்லையா. ஆனால் உண்மையை அறிந்தால் மிகப் பெரிய அதிர்ச்சியாக இருக்கும்.

முன்பு மதுரையை வைத்து நிறையப் படங்கள் வந்துள்ளன.அந்தப் படங்களில் மதுரை மண்ணின் பாசம், நேசம், உயிர்ப்பு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றையே பிரதானமாக காட்டுவார்கள். குறிப்பாக அந்தக் காலத்து சிவாஜி கணேசன் படங்கள், பின்னர் வந்த எஸ்.எஸ்.ஆர். படங்கள், பிற்காலத்தில் வந்த ராமராஜன் படங்களில் இதை அதிகம் காணலாம்.

ஆனால் தற்போது வெளிவரும் தமிழ் படங்களில் மதுரையில் ஏதோ கொலையை தொழில் போல செய்வதாக காட்டுகிறார்கள். காலையில் எழுந்துதம் பல்லை விளக்கி விட்டு, பத்து பேரைக் கொலை செய்து பின்னர்தான் டீ சாப்பிடுவார்கள் என்பது போலவும், மத்தியானத்திற்கு மண்டையை வெட்டி கறி சமைத்து சாப்பிடுவார்கள் என்பது போலவும், சாயந்திரம் நாலு பேரை சாய்த்து விட்டுத்தான், ராத்திரிக்குத் தூங்கப் போவார்கள் என்பது போலவும் காட்டுகிறார்கள்.

மதுரை என்றாலே ரத்த பூமி என்பது போலவும், அங்கு மனிதர்களே கிடையாது என்பது போலவும், மதுரையி்ல் தினசரி தவறாமல் கொலை செய்வது போலவும் காட்டி மதுரையின் மாண்பை சீர்குலைத்து, சீரழித்து வருகிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.

குறிப்பாக சுப்பிரமணியபுரம் படம் வந்த பிறகுதான் மதுரை என்றாலே கொலை நகரம் என்ற அவப்பெயரை மக்கள் மத்தியிலும், சர்வதேச அளவிலும் திணித்து விட்டனர் தமிழ் சினிமாக்காரர்கள்.

மதுரை சம்பவம், ஆடுகளம் ஆகிய படங்களும் மதுரையில் எடுக்கப்பட்டவை. அனைத்திலும் வன்முறை தான் பிரதானம்.

இது சாதாரண சினிமாதானே என்று விட்டு விட முடியவில்லை. காரணம், மதுரையின் பொருளாதாரத்தையே பாதிப்பதாக அமைந்துள்ளன இந்த சினிமாப் படங்கள் என்ற உண்மை இப்போது தெரிய வந்துள்ளது.

இப்படிப்பட்ட கேடு கெட்ட திரைப்படங்களைப் பார்த்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மதுரையில் கிளை அமைக்க அஞ்சும் அளவுக்கு நிலைமை கை மீறிப் போயுள்ளது.

இந்தியாவின் பெருநகரங்கள் தவிர்த்து 2ம் நிலை நகரங்களில் கிளை அமைக்கலாம் என நினைக்கும் பெரிய பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கடைசியாகத்தான் மதுரையைப் பற்றி சிந்திக்கிறார்களாம். காரணம், திரைப்படங்களில் காட்டப்படும் பொய்யான மதுரையை நினைத்து அஞ்சுவதால்.

இதில் விந்தை என்னவென்றால் சென்னை, பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் 25 சதவீதம் பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள்தான்.

கடந்த ஆண்டு நடந்த பல்துறை வல்லுநர்கள் கூட்டத்தில் தான் இந்த கருத்து வெளியிடப்பட்டது.

மதுரையில் இலந்தைக்குளத்தில் கடந்த திமுக ஆட்சியின்போது ஐடி பூங்கா அமைக்கப்பட்டது. அதில் இதுவரை இதுவரை 3 நிறுவனங்கள் மட்டும் தான் தங்கள் கிளைகளை அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல வடபழஞ்சியில் அமைக்கப்படுவதாக கூறப்பட்ட ஐடி பூங்கா இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை.

தமிழ் சினிமாக்களில் மதுரையைப் பற்றி அவதூறாக, அசிங்கமாக, கோரமாக சித்தரிப்பதை தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம் என்ற கருத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணி புரியும் மதுரையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழக அரசு இந்த விஷயத்தை சற்று சீரியஸாக கவனித்தால் மட்டுமே மதுரைக்கு மோட்சம் கிடைக்கும் - இந்த தமிழ் சினிமா வியாபாரிகளிடமிருந்து.

13 Comments:

Geetha Sambasivam said...

என்னத்தைச் சொல்றது?? மதுரையின் இமேஜ் ரொம்பவுமே சீரழிந்து விட்டது என்பது உண்மையே. என் மருமகள் ஹூஸ்டனின் எம்.எஸ். முடித்தவள் மதுரைக்கு அழைத்துச் செல்லுகையில் வரவே ரொம்ப யோசனை செய்தாள். வேறே வழியில்லாமல் தான் வந்தாள். அவளுக்குத் தெரிந்த விஷயங்கள் எல்லாம் மதுரை என்றாலே அரிவாள், வெட்டு, குத்து, ரத்தம் தான். படிச்சவங்க மனசிலேயே இப்படித் தான் பதிந்திருக்கிறது. இதை நானும் ரொம்ப நாட்களாய் எழுத எண்ணித் தயங்கிக் கொண்டிருந்தேன். ஏனெனில் சமீப காலமாக மதுரை வாசம் செய்யவில்லை. செய்யாமல் எப்படிச் சொல்வது என்ற யோசனை தான்.

Guna said...

ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


நன்றி
http://vallinamguna.blogspot.com/

சித்ரவேல் - சித்திரன் said...

மதுரையை பாத்தாலே.... அட மதுரைக்காரனானு கொலைகாரன பாத்து நடுங்கறமாதிரி நடுங்க இப்ப வர்ர படம் தான் காரணம்.. இதேதான் நெல்லைக்காரங்க நிலையும்.. அருவாளும் கையுமாவா திரியிறாங்க... அழவும் முடியல சிரிக்கவும் முடியல.. கோவப்படமுடியுது.. ரெளத்திரம் பழகிட்டு இருக்கோம்ல...

எஸ் சக்திவேல் said...

உண்மை மதுரைக்கும் வந்திருக்கிறேன், நன்றாகவே பிடித்திருந்தது. வரமுன் கற்பனையில் எல்லாப் பேர்வழிகளும் முதுகுப்புக்குப் பின் அரிவாள் வைத்திருப்பார்கள் என்றுதான் நினைத்திருந்தேன்.

Karthikeyan Rajendran said...

அப்படியே இந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க
http://sparkkarthikovai.blogspot.com/p/own-details.html

revathimohan said...

naa maduraikaran enta vachukathanu madurai vasikal maarthattamal irukanum first ...evargale madurai n per 30% kedupavargal,athan sutru paguthil irupavakalum thappu seithu maati kollum patchathil madurai vaasiyaga thangalai soli kolkirarkal ...

Anonymous said...

naa maduraikaran enta vachukathanu madurai vasikal maarthattamal irukanum first ...evargale madurai n per 30% kedupavargal,athan sutru paguthil irupavakalum thappu seithu maati kollum patchathil madurai vaasiyaga thangalai soli kolkirarkal ...

காட்டான் said...

போன வருடம் மீண்டும் மதுரைக்கு வந்தேன் மீனாச்சியம்மன் கோவிலில் இப்போது பார்க இன்னும் ஆசையாக இருக்கு பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இப்பிடியிலை என்னை பொருத்தவரை இந்த சினிமாகாரர்களால் ஒன்றும் செய்ய முடியாது... இனி இப்படி வரும் நாலு படங்களை புறக்கனித்தாலே போதும் சினிமாகாரங்க தலைதெறிக்க ஓடிடுவாங்க.. ஆனா இந்த படங்களை வெற்றி பெற வைப்பவர்களே மதுரைக்காரர்கள்தான்!!!???

சீனுவாசன்.கு said...

கவலைப்படாதே நண்பா!
காலங்கள் மாறும்!

Unknown said...

அன்பரே!
தற்கால சினிமாக்கள் மதுரையை மட்டுமா சீரழித்தது
தமிழனின், பண்பாட்டை, கலாச்
சாரத்தை, ஏன் தமிழ்நாட்டையே
சீரழித்து விட்டது என்றால் அது
மிகையாகாது!

என் வலைப்பக்கம் தாங்கள்
வருவதேயில்லை!

புலவர் சா இராமாநுசம்

சிவகுமாரன் said...

நான் கடந்த 3 வருடங்களாக மதுரையில் வசித்து வருகிறேன். எல்லா ஊர்களிலும் நடப்பது போல் தான் இங்கும் கொலையும் கொள்ளையும் நடக்கின்றன. பொள்ளாச்சி , உடுமலை, கோபி போன்ற நகரங்கள் சினிமாவால் வளர்ச்சி அடைந்தன. மதுரை சினிமாவால் அழிகிறது அந்து பரிதாபம் . வேறென்ன சொல்வது ?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சுப்ரமணியபுரம் படம் சமேபத்தியபடம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பே வந்த கில்லி படத்திலயும் மதுரை கொலை நகரமாத் தானே காட்டி இருக்காங்க

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மதுரைன்னாலே ரத்த பூமி.இங்க குழாயைத் திறந்தா தண்ணி வராது ரத்தம்தான் வரும்னு.வடிவேலு சொல்லறமாதிரி ஆக்கிட்டாங்க